Site icon TNPSC Academy

TNPSC Current Affairs in Tamil – Oct.10, 2016 (10/10/2016)

www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Oct.10, 2016 (10/10/2016)

உலக அஞ்சல் தினம்

சுவிஸ் தலைநகரான பெர்னில், 1874 ஆம் ஆண்டு உலகளாவிய அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்டதை யொட்டி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9 அன்று உலக அஞ்சல் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு 2016 கரு : “கண்டுபிடிப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் சேர்ப்பு”

 

உலக மனநல ஆரோக்கிய தினம்

உலகம் முழுவதும் மனநல சுகாதார பிரச்சினைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மன ஆரோக்கியதிற்கு ஆதரவு முயற்சிகளை பரப்பும் பொருட்டு, உலக மனநல ஆரோக்கிய தினம் அக்டோபர் 10 அன்று ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு 2016 கரு : “மனோதத்துவ முதல் உதவி”

நோபல் பரிசு – பொருளாதாரம்

ஆலிவர் ஹார்ட் (Oliver Hart) மற்றும் ஹோம்ஸ்ட்ராம் (Bengt Holmstrom) ஆகிய இரு கல்வியாளர்கள், அவர்களின் பொருளாதார பணிகளுக்காக அவர்களுக்கு 2016 -க்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவர்களின் காப்பீடு வடிவமைத்தலில் நவீன வழி யோசனைகளான, கார் காப்பீடு, தலைமை நிர்வாகிகள் போனஸ் மற்றும் பொது சேவைகளை வழங்குவதற்கான பகுதிகளில் ஒப்பந்தங்கள் எழுதிகொள்வது பற்றி யோசிக்க வழிகள் போன்ற முக்கியமான வடிவமைப்பு பிரச்சினைகள் பற்றி தெளிவாக சிந்திக்க உதவுகிறது.

லாளிமா அபியான் (LALIMA ABHIYAN) – மத்தியப் பிரதேசம்

மத்திய பிரதேசத்தில் அனீமியாவிலிருந்து விடுதலை அடைவதற்காக அம்மாநிலத்தில் லாளிமா அபியான் (LALIMA ABHIYAN) எனும் திட்டம் நவம்பர் 1-லிருந்து நடைமுறை படுத்தப்பட இருக்கிறது.

இந்த திட்டம் பற்றி :

இந்த திட்டத்தின் கீழ், இலவச இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் மருந்துகள் அனைத்து கடைகள், கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளிலும் கிடைக்கும்.

சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்

 சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டின் கூட்டமைப்பு (ISSF), 2016 ஆம் ஆண்டிற்க்கான துப்பாக்கி சுடுதல் விளையாட்டின் வெற்றிக்காக இந்திய துப்பாக்கி சுடும் வீரர் “ஜீது ராய்” -க்கு “சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்” பட்டத்தினை வழங்கியது.

அவரை பற்றி :

அவர் ஒரு நேபாளி பாஸிய இந்திய துப்பாக்கி சுடும் வீரர் ஆவார். இந்திய அரசு அவருக்கு “கேல் ரத்னா 2016″ விருது அறிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் சர்வதேச மத்தியஸ்த தீர்ப்பு மையம்

இந்தியாவின் முதல் சர்வதேச மத்தியஸ்த மையம் மகாராஷ்டிராவிலுள்ள மும்பையில் நிறுவப்பட்டுள்ளது.

இதன் மூலம் வணிக சர்ச்சைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் இந்திய வணிக நிறுவனங்கள் தங்களுக்குள் ஏற்படும் வணிக மோதல்களில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் இந்த மையம் உதவுகிறது.

Exit mobile version